மண்ணில் ஒரு பெயரில்லாத்தோற்றம் கொண்டு,
தோன்றிய
காரணமோ தானறியாமல்,
பிறந்து, உண்டு, உறங்கி, பேசி, பாடி, ஆடி, ஓடி,
மற்றவையின் இயல்புகளையும் காரணங்களையும் ஆராய்ந்து,
இப்புறம் திரும்பி தன்னை ஆராயும் முன்னே,
அம்மண்ணில் மண்ணாகக்கலக்கிறானே,
இதல்லவா வேடிக்கை?